ஒட்டான்குளம் முதல்மடையில் மண் அரிப்பால் கரை உடையும் அபாயம்-நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

கூடலூர் : தேனி மாவட்டத்தின் தெற்கு எல்லைப்பகுதியான கூடலூர் நகராட்சியின் மத்திய பகுதியில் ஒட்டான்குளம் என்றழைக்கப்படும் மைத்தலை மன்னாடிகுளம் கண்மாய் அமைந்துள்ளது. 37.65 ஏக்கர் பரப்பளவும், 1,323 மீட்டர் நீளமும் கொண்ட மைத்தலை மன்னாடிகுளம் கண்மாய்க்கு, மழை காலங்களில் சுரங்கனார் நீர்வீழ்ச்சியிலிருந்து வரும் மழை நீரும், முல்லைப்பெரியாறிலிருந்து வைரவன் வாய்க்கால் மூலம் கூட்டாறு வழியாகவும் தண்ணீர் கொண்டுவரப்பட்டு தேக்கி வைக்கப்படுகிறது. 9.110 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட இக்குளத்து நீர் மூலம் இப்பகுதியிலுள்ள 500 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் பாசனவசதி பெறுகிறது. மேலும் இப்பகுதியிலுள்ள கால்நடைகளுக்கு ஒட்டான்குளத்து நீர் குடிநீராகவும் பயன்படுகிறது.இந்நலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் ஒட்டான்குளம் முதல்மடை (தலை மதகு) பகுதியில் மழையினால் மண்அரிப்பு ஏற்பட்டது. அப்பகுதி விவசாயிகள் பொதுப்பணித் துறையினருக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழையில் மதகுப்பகுதியை ஒட்டி உள்ள கரைப்பகுதி மண் அரிப்பினால் கான்கிரீட் சுவர் இடிந்து விழுந்து வருகிறது. இதனால் ஒட்டன்குளத்தின் கரை இடியும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கண் துடைப்பு வேலைகடந்த 2017-18ம் ஆண்டு மாவட்டத்தில் உள்ள குளங்களை தூர்வாரவும், குளம் மற்றும் வாய்க்கால் கரைகளை சீரமைக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது. தேனி மாவட்டத்தில் குளம், வாய்க்கால் கரைகளை பலப்படுத்தும் திட்டத்தில் சுமார் 6 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் கூடலூர் ஒட்டான்குளத்திற்கு சுமார் 40 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஒட்டான்குளத்து கரை முறையாக பலப்படுத்தவில்லை. அப்போது பொதுப்பணித் துறையின் இந்த கண்துடைப்பு வேலை குறித்து விவசாயிகள் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை….

Related posts

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு பாஜக பொருளாளர் ஆஜராக ஆணை

வரதட்சணை கொடுமை வழக்கில் 7 ஆண்டு சிறை..!!

டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதம் அமல்