ஒட்டன்சத்திரம் பள்ளியில் காலை உணவு திட்டம் ஆய்வு

ஒட்டன்சத்திரம், ஜூன் 29: ஒட்டன்சத்திரம் காந்தி நகரில் அரசு துவக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இப்பள்ளிக்கு வந்த நகராட்சி ஆணையர் ஆறுமுகம், மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரத்தை ஆய்வு செய்தார். பின்னர் உணவை சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் விநியோகிக்க வேண்டும் என பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை