ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தயத்தில் இ- சேவை மையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் அர.சக்கரபாணி

ஒட்டன்சத்திரம், ஜூலை 28: ஒட்டன்சத்திரம் அருகே தொப்பம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கள்ளிமந்தையம், பொருளுர், வாகரை ஆகிய ஊராட்சிகளில் நடைபெறும் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் பதிவேற்றும் முகாமினை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆய்வு செய்தார். தொடர்ந்து அமைச்சர், கள்ளிமந்தயத்தில் இ- சேவை மையத்தை திறந்து வைத்தும், மேல்கரைப்பட்டி நால்ரோடு, ராஜாம்பட்டி, புஷ்பத்தூர் வி.வி.நகர், புஷ்பத்தூர், கண்டியகவுண்டன் புதூர் ஆகிய இடங்களில் புதிய நியாயவிலை கடைகளை திறந்து வைத்து பேசினார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சரவணன், மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர்கள் தங்கராஜ், சுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பொன்ராஜ், ஒன்றிய தலைவர் சத்திய புவனா, துணை தலைவர் தங்கம், வட்டாட்சியர் முத்துச்சாமி, வட்ட வழங்கல் அலுவலர் பிரசன்னா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்தராஜ், கீரனூர் பேரூர் செயலாளர் அன்பு (எ) காதர்பாட்சா, மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் கு.சின்னச்சாமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனா்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு