ஒட்டன்சத்திரம் அருகே பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

ஒட்டன்சத்திரம், ஜூலை 30: ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் லெக்கையன்கோட்டை ஊராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை மற்றும் பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகை குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு லெக்கையன்கோட்டை ஊராட்சி தலைவர் செல்லம்மாள் தண்டபாணி தலைமை தாங்கினார். துணை தலைவர் குழந்தைவேல், திண்டுக்கல் மகளிர் உதவி திட்ட அலுவலர் தேன்ராஜ் முன்னிலை வகித்தனர்.

இதில் ஒட்டன்சத்திரம் வட்டார இயக்க மேலாளர் சித்ராதேவி, வட்டார இயக்க உதவி ஒருங்கிணைப்பாளர்கள் விமலா, ஜெயந்தி, ராணி, தங்கச்சியம்மாபட்டி சமுதாயக்குழு பயிற்றுநர் பிரேமா, ஜோதி, மகளிர் குழுவினர், பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு பேரணியில், நெகிழி பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பெண்களுக்கு ரத்த சோகை நோயினால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடி மாணவ, மாணவிகள் கோஷம் எழுப்பியவாறு சென்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்