ஒட்டன்சத்திரம் அருகே தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

ஒட்டன்சத்திரம், மார்ச் 11: ஒட்டன்சத்திரம் அருகே மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை வலையபட்டியில் மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரிக்கு மறுநாள் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்தாண்டும் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

பக்தர்கள் தலையில் கோயில் பூசாரி தேங்காய் உடைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து ஏராளமான பக்தர்ள் தலையில் தேங்காயை டமால் டமால் என உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஒரு சில பக்தர்களின் தலையில் ரத்தம் கொட்டியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவை காண தமிழகத்தின் அனைத்து பகுதியிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை