ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஒட்டன்சத்திரம், ஜூலை 12: ஒட்டன்சத்திரத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அருள்செல்வன், ஒன்றிய தலைவர் ஆறுச்சாமி, ஒன்றிய பொருளாளர் முருகேஸ்வரி சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கடந்த 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள 100 நாள் வேலையை உடனடியாக வழங்க வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள சம்பளம் ரூ,319ஐ முழுமையாக வழங்கிட வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாகவும் சம்பளம் ரூ.600 ஆகவும் உயர்த்தி வழங்கிட வேண்டும்.

100 நாள் வேலையை சுழற்சி முறையில் வழங்காமல் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் சிபிஐ ஒன்றிய செயலாளர் சிவமணி, தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் மனோகரன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

நெல்லை- சென்னை வந்தே பாரத்துக்கு திருச்செந்தூரில் இருந்து இணைப்பு ரயில் நாசரேத் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்

உடன்குடியில் நாளை வருமுன் காப்போம் திட்ட முகாம்

வேப்பங்காடு பள்ளி ஆண்டுவிழா