ஒடுகத்தூர் அருகே பசுமாட்டை திருடி விற்க முயன்ற 2 பேர் கைது

ஒடுகத்தூர், ஜூலை 30: ஒடுகத்தூர் அருகே பசுமாட்டை திருடி விற்க முயன்ற 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். ஒடுகத்தூர் அடுத்த மராட்டியபாளையம் ஏ.புதூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்லால். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. மேலும், 5க்கும் மேற்பட்ட மாடுகளை பராமரித்து வருகிறார். கடந்த 26ம் தேதி இவரது நிலத்தில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த 5 மாடுகளில் ஒரு பசுமாட்டை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த மோகன்லால் பல இடங்களில் தேடிபார்த்தும் மாடு கிடைக்கவில்லை. இதையடுத்து, அவரது நிலத்தை ஒட்டியவாறு உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தபோது, அதில் மர்ம ஆசாமிகள் 2 பேர் பசுமாட்டை திருடிச்சென்றது ெதரியவந்தது. இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் அகரம் நான்கு முனை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் பைக்கில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், அகரம் பகுதியை சேர்ந்த சேட்டு(65), எல்லப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்த பரணி(25) என்பதும், மோகன்லாலின் பசுமாட்டை திருடி அதனை விற்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், 2 பேரையும் கைது செய்து வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், திருடிச்சென்ற பசு மாட்டை மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

 

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்