ஒடசல்பட்டி கூட்ரோட்டில் பழுதான மின்கம்பத்தை சீரமைக்க கோரிக்கை

கடத்தூர்: கடத்தூர் அடுத்த ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில், பழுதடைந்து காணப்படும் மின்கம்பத்தை சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடத்தூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் சேலம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை இணைக்கும் மையப்பகுதியான ஒடசல்பட்டி கூட்ரோடு வழியாக, நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த கூட்ரோடு பகுதியில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. முற்றிலும் சிமென்ட் பூச்சு உதிர்ந்து எலும்பு கூடு போல் காணப்படுகிறது. இதனால், லேசான காற்று அடித்தாலும் மின்கம்பம் முறிந்து விழுந்து மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது. இந்த மின் கம்பத்தை மாற்ற வேண்டுமென மின்வாரியத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், கண்டு கொள்ளவே இல்லை. எனவே, பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு, பழுதடைந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

9 நாள் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு காவல்துறைக்கு 100 புதிய அறிவிப்புகள்: போலீஸ் மானியக்கோரிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடு; ஊழல் வழக்கில் கைதான துணைவேந்தருக்கு ஒரு ஆண்டு பதவிக்காலத்தை நீட்டித்த ஆளுநர்: கல்வியாளர்கள் அதிருப்தி

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ஜூலை 5ல் ஆர்ப்பாட்டம்: மீனவர் சங்கங்கள் அறிவிப்பு