ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு ஆதரவான நிலையை இந்திய அரசு எடுக்கும் என்ற நிலைப்பாட்டுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்..!

சென்னை: ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு ஆதரவான நிலையை இந்திய அரசு எடுக்கும் என்ற நிலைப்பாட்டுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த தீர்மானம் மீது நாளை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் நடைபெற உள்ளது. இலங்கையில் நடந்த போரில் இலங்கை அரசுப் படை மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு என இரு தரப்பினரும் மோசமான அடாவடிச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்படுகிறது. இப்போரில் குறைந்தபட்சம் 1,00,000 பேர் கொல்லப்பட்டனர்.இலங்கையில் 26 ஆண்டு காலமாக நடந்த கொடூரமான உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை பொறுப்பேற்கச் செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய தீர்மானத்தை இலங்கை அரசு எதிர்கொள்கிறது. இந்த நிலையில்,  ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு ஆதரவான நிலையை இந்திய அரசு எடுக்கும் என்ற நிலைப்பாடு, இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என்று அந்நாட்டு வெளியுறவுச் செயலாளர் கூறியிருப்பதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமை மன்ற தீர்மானம் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி