ஐஸ் கட்டி! ஐஸ் கட்டி! இயற்கை அழகு!

சருமத்தின் பல பிரச்னைகளுக்கும் சிறந்த தீர்வு இந்த ஐஸ் கட்டிகள். வெறும் ஐஸ் கட்டிகளை முகத்தில் தேய்த்து வந்தாலே சருமத் துவாரங்கள் சுருங்கி, வளவளப்பாக மாறும். சரி இதோ சில சிலிர் ஐஸ் கட்டி டிப்ஸ்கள். * எலுமிச்சைச் சாறு+வைட்டமின் ஈ மாத்திரைகளை கலந்து ஐஸ் டிரேயில் பிழிந்து கட்டிகளாக மாற்றி குளிக்கும் முன் தடவி வர முகம் பிரகாசிக்கும். * மேலும் மறுக்கள், வடுக்களும் கூட நாளடைவில் மறைந்துவிடும். அரிசி கழுவிய நீர் மற்றும் அதனுடன் கலக்கப்பட்ட பயத்தம் மாவு கலவையாக ஐஸ் டிரேயில் ஊற்றிவைத்து முகத்தில் தேய்க்க சரும துவாரங்கள் சுத்தமாக்கப்பட்டு பிராகாசிக்கும். * சருமத்தின் நிறமும் சற்று பளிச்சென மாறும். வெள்ளரி + எலுமிச்சை இரண்டையும் மிக்ஸியில் அரைத்து அந்தக் கலவையை ஒரு ஐஸ் டிரேயில் ஊற்றி, கிடைக்கும் கட்டிகளை இரவு தூங்கும் முன் தடவி விட்டு அப்படியே இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் குளிர்ந்த நீரில் கழுவ சருமத்தின் கருமைகள் மறையும். * வெள்ளரியில் இருக்கும் நீர்ச்சத்து காரணமாக கருவளையங்களும் சரியாகும்1 லிட்டர் தண்ணீரில் 2 ஸ்பூன் வெட்டிவேர் பவுடரை கலந்து ஐஸ் ட்ரேயில் நிரப்பி ஃப்ரீசரில் வைக்கவும். பின் மெல்லிய துணியில் வெட்டிவேர் ஐஸ் க்யூபை கட்டி பருவில் ஒத்தடம் தர முகப்பரு குறைந்து முகம் பொலிவு பெறும்.* கிரீன் டீ அல்லது பிளாக் காபி இவற்றை ஐஸ் டிரேயில் ஊற்றி கிடைக்கும் ஐஸ்கட்டிகளை முகத்தில் தேய்க்க முக வீக்கத்தை குறைப்பதோடு குறிப்பாக கண்களைச் சுற்றியுள்ள பை போன்ற வீக்கத்தையும் குறைக்க உதவும். குறிப்பு: ஐஸ் கட்டிகளை நேரடியாகத்தேய்ப்பதால் சைனஸ், ஜலதோஷம் பிரச்னைகள் உண்டாகலாம் என நினைப்போர், ஒரு மெல்லிய காட்டன் துணியில் ஐஸ் கட்டிகளை சுற்றி வைத்து பயன்படுத்தலாம். …

Related posts

பெண்களின் ஆரோக்கியத்தில் பெரும்பங்காற்றும் பூசணி விதை!

உடலுக்கு செம்மை சேர்க்கும் செம்பு பாத்திரம்!

பானி பூரி கீ செயின், டீ கிளாஸ் நெக்லஸ் , கப் கேக் தோடு… கலக்கும் மினியேச்சர்கள்!