ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

பென்னாகரம், நவ.18: கார்த்திகை மாதம் பிறந்தவுடன் சபரிமலைக்கு மாலை அணிந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் கொள்வார்கள். நேற்று மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து மண்டல பூஜைக்காக 42 நாட்கள் நடை திறந்திருக்கும். இதனையடுத்து ஒகேனக்கல் காவிரியில் புனித நீராடிய ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர். கார்த்திகை முதல் நாளான நேற்று அரூரில் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்தனர். அரூர் நான்கு ரோடில் உள்ள ஐயப்பன் கோயிலில் குருசாமி மாலை அணிவித்தார். அதே போல், பஸ் நிலையம் காமாட்சி அம்மன் கோவில், தீர்த்தமலை அகத்தியர் ஆஸ்ரமத்தில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர், மொரப்பூர், கம்பைநல்லூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கோயில்களில் பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். சபரிமலைக்கு மாலை அணிந்துள்ள பக்தர்களுக்கு, அரூர் நான்கு ரோடு ஐயப்பன் ஆலயத்தில், இம்மாதம் முழுவதுமாக மதியம் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை