ஐபிஎஸ் அதிகாரிகள் 49 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகள் 49 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாநகர காவல் ஆணையராக செந்தாமரைக்கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாநகர காவல் ஆணையராக நஜ்மல் ஹோடா நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாநகர காவல் ஆணையராக வனிதாவை நியமித்துள்ளது தமிழக அரசு. ஐபிஎஸ் அதிகாரிகள் அமித்குமார் சிங், அஸ்வின் கோட்னிஸ், பாலகிருஷ்ணன், பிரதீப்குமார், சுதாகர் ஆகியோர் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கார்த்திகேயன், பிரதீப் ஆகியோரும் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டனர். திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக பாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.யாக சுதாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி சுமித் சரண் ரயில்வே ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்….

Related posts

கன்னியாகுமரி கோதயாறு அருகே யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: பொதுமக்கள் அச்சம்

ஆண்டிபட்டி அருகே பள்ளி மாணவர்கள் சென்ற மினி வேன் மரத்தில் மோதி விபத்து!!

தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : தமிழ்நாடு அரசு புகழாரம்