ஆவடி: திருநின்றவூர் கோமதிபுரம் 3வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் கார்த்திகேயன் மனைவி தீபிகா (29). இவர் அம்பத்தூர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது பைக்கில் வந்த 3 பேர், தீபிகா கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர். புகாரின்படி, அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அம்பத்தூர் இந்திரா நகரை சேர்ந்த அஜய் (21) என்பவரை கைது செய்தனர்….