ஐகோர்ட்டில் நெருக்கும் சொத்து குவிப்பு வழக்கு : விசாரணைக்கு தடை கேட்டு அவசரமாக சுப்ரீம் கோர்ட்டுக்கு ஓடிய ராஜேந்திர பாலாஜி!

புதுடெல்லி :உயர் நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மேல்முறையீடு செய்துள்ளார்.அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 2011 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.7 கோடி அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரியும் மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர், கடந்த 2013-ம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 3-ம் தேதி நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்தனர். அமைச்சராக பதவி வகித்த ராஜேந்திரபாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதி எம்.சத்தியநாராயணனும், நீண்ட இடைவெளிக்கு பிறகுவழக்கு பதிவு செய்து விசாரிப்பதால் எவ்வித பலனும் ஏற்படப் போவதில்லை எனக்கூறி மகேந்திரனின் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி ஆர்.ஹேமலதாவும் தீர்ப்பளித்தனர்.இதனால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியான எம்.நிர்மல்குமார் அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக ராஜேந்திர பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அதில், தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விதிமுறைகளை பின்பற்றாமல் உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது என்று கூறிய அவர் மேலும் இது காலம் கடந்த குற்றச்சாட்டு என்பதால் அதில் முகாந்திரம் இல்லை. அதனால் உயர்நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார். …

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!