ஐஐடி, ஐஐஎம் போன்ற நிறுவனங்களில் பயில முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை: சென்னை கலெக்டர் தகவல்

சென்னை: ஐஐடி, ஐஐஎம் போன்ற நிறுவனங்களில் பயில்வதை ஊக்குவிக்க முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படுவதாக சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: 2022-2023-ம் ஆண்டு முதல் உயர்கல்வியான ஐஐடி, ஐஐஎம், நேஷ்னல் லா ஸ்கூல் போன்ற நிறுவனங்களில் பயில்வதை ஊக்குவிக்கும் பொருட்டு முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குதல் மற்றும் முன்னாள் படைவீரர் மற்றும் அவர் தம் கைம்பெண்களுக்கு அவர் தம் குழந்தைகள் சைனிக் பள்ளியில் பயில்வதற்காக ஊக்கத் தொகையாக ஆண்டிற்கு ரூ.50,000 மற்றும் சைனிக் பள்ளிகளில் முன்னாள் படைவீரர்களின்குழந்தைகள் சேருவதை ஊக்குவிக்கும் பொருட்டு ஆண்டிற்கு ரூ.25,000 வழங்கிட தொகுப்பு நிதியின் மாநில மேலாண்மை குழுவால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குநரை, 044-2235 0780 என்ற தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை