ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக முற்றுகை ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம்: விவசாயிகள் அறிவிப்பு

கர்னால்: மண்டை உடைக்க உத்தரவிட்ட ஐஏஎஸ் அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தி, அரியானாவில் விவசாயிகள் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒன்றிய அரசின் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் பாஜ நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க சென்றபோது, அவருடைய காரை விவசாயிகள் வழிமறித்து போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அப்போது,  அங்கிருந்த ஐஏஎஸ் அதிகாரி ஆயுஷ் சின்கா, ‘விவசாயிகளின் மண்டையை உடையுங்கள்,’ என்று போலீசாருக்கு உத்தரவிடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.இவரை சஸ்பெண்ட் செய்யும்படி வலியுறுத்தி, கர்னாலில் நேற்று முன்தினம் விவசாயிகள் மகா பஞ்சாயத்து கூட்டத்தை கூட்டினர். பின்னர், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, ஊர்வலமாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளனர். தங்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வரையில், ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம் என்று அவர்கள் அறிவித்துள்ளனர். இதனிடையே அரசு அதிகாரிகள் விவசாயிகளுடன் இரண்டு முறை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தன. இதனால், அங்கு பதற்றம் நிலவுகிறது. இது குறித்து அரியானா பாரதிய கிசான் சங்க தலைவர் குர்னாம் சிங் சதுனி கூறுகையில், “பணியிட மாற்றம் என்பது தண்டனை அல்ல. சாலை மறியலுக்காக விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்யும் போலீசார், விவசாயிகளின் மண்டையை உடையுங்கள் என்று கூறிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? ’ என்றார். 100% விவசாயிகளுக்கு ஆதரவாக அறிக்கை: உச்ச நீதிமன்றம் நியமித்த நிபுணர் குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் ேநற்று கூறுகையில், `நிபுணர் குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை 100 சதவீதம் விவசாயிகளுக்கு ஆதரவாகவே உள்ளது’ என்றார்….

Related posts

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தங்கக்கொடி மரம் சேதம்: தேவஸ்தான நிர்வாகம் அதிர்ச்சி

அமேதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரக் கொலை செய்த மர்ம நபர்கள்: குடும்பத்தினருக்கு தொலைபேசியில் ராகுல் காந்தி ஆறுதல்

ஜாபர் சேட் மீதான அனைத்து வழக்கு விசாரணைக்கும் உச்சநீதிமன்றம் தடை