ஐஎஸ்எல் கால்பந்து; கவுகாத்தியை வீழ்த்தி கொல்கத்தா இறுதி போட்டிக்கு தகுதி: 13ம் தேதி மும்பையுடன் பலப்பரீட்சை

கோவா: கோவாவில் நடந்து வரும் 7வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில், அரையிறுதி 2வது சுற்றில் நேற்று நடந்த போட்டியில் கவுகாத்தி-கொல்கத்தா அணிகள் மோதின. விறுவிறுப்புடன் தொடங்கிய இந்த போட்டியில் கொல்கத்தா ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் கொல்கத்தாவின் டேவிட் வில்லியம்ஸ் கோல் அடித்து முன்னிலை ஏற்படுத்தினார். 2வது பாதியில் ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் மன்வீர்சிங் கோல் அடிக்க 2-0 என கொல்கத்தா முன்னிலை பெற்றது. பதில் கோல் அடிக்க கவுகாத்தி வீரர்கள் கடுமையாக போராடினர். 74வது நிமிடத்தில், அந்த அணியின் சுகைர் தலையால் முட்டி கோல் அடித்தார். 81வது நிமிடத்தில் கவுகாத்தி அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை லூயிஸ் மச்சடோவா வீணாக்கினார். முடிவில் கொல்கத்தா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்குள் நுழைந்தது. வரும் 13ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில் மும்பை சிட்டி எப்சியுடன் கொல்கத்தா பலப்பரீட்சை நடத்த உள்ளது….

Related posts

சாம்பியன் டிராபி தொடர் இந்தியா-பாகிஸ்தான் மார்ச் 1ல் மோதல்: உத்தேச அட்டவணை வெளியானது

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் சின்னர், ஜாஸ்மின் 2வது சுற்றில் வெற்றி

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்கள் 27 பேர் கொண்ட பட்டியல் அறிவிப்பு