ஐஎன்எஸ் கடற்படை தளத்தில் மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் சாவு

கேடிசி நகர், பிப். 13: நெல்லை மாவட்டம், தெற்கு விஜயநாராயணத்தைச் சேர்ந்தவர் ஸ்டாலின் (55). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அங்குள்ள கடற்படை தளத்தில் கான்ட்ராக்ட் அடிப்படையில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்துவந்த ஸ்டாலின், வழக்கம்போல் சம்பவத்தன்று பணியில் ஈடுபட்ட போது எதிர்பாராதவிதமாக இவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்