ஏழை குடும்பத்தில் இருந்து ஆவடி மேயர்

சென்னை: ஆவடி மாநகராட்சியின் மேயர் வேட்பாளர் ஜி.உதயகுமார். இவர் 9வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். திமுக வட்டச்செயலாளர். 10ம் வகுப்பு படித்துள்ளார். திருமுல்லைவாயில் காலனி, திருவள்ளுவர் தெருவில் குடும்பத்துடன் வசிக்கிறார். தந்தை குணசேகரன் ஓய்வுபெற்ற பாதுகாப்பு துறை ஊழியர். உதயகுமாரின் மனைவி வினாயகி(28). ஜெய் ஆதித்யா (4) என்ற மகன் உள்ளார். ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர். இவரது குடும்பமே திமுக குடும்பம். இவரை, ஆவடி மாநகராட்சி மேயராக திமுக அறிவித்துள்ளதை அடுத்து கட்சியினர் பெருமை அடைந்துள்ளனர். மேயர் வேட்பாளர் ஜி.உதயகுமார் கட்சி தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசரை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும், இவரை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆவடி மாநகராட்சியின் துணை மேயர் வேட்பாளராக மதிமுக செயலாளரும், கவுன்சிலரான எஸ்.சூரியகுமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். ஆவடி மாநகராட்சியில், 23 வது வார்டு கவுன்சிலராக எஸ்.சூரியகுமார் தேர்வு செய்யப்பட்டார். இவர், மதிமுக மாநகர செயலாளராக பணியாற்றி வருகிறார். சூரியகுமாரின் மனைவி பார்வதி (44). இவர்களது மகன் விஷ்ணுவரதான் (13). இவர், மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், மதிமுக தேர்தல் பணி செயலாளர் வக்கீல் ஆவடி அந்திரிதாஸ் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்