ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற வழியில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: கொளத்தூரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் உரையாற்றிய அவர்; இந்த இனிய விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இனிமை, இன்பம், மகிழ்ச்சி, ஊக்கம், உற்சாகம் பெற நான் எப்போதும் கொளத்தூரைத் தான் நாடுவது உண்டு. இன்றைக்கு மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்களுக்கு எதிரான அரசுதான் இது. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற வழியில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. மனிதநேயத்தை வளர்ப்பதே திராவிடத்தின் கொள்கை. அண்ணா வழியைப் பின்பற்றி திராவிட மாடல் அரசு நடந்து வருகிறது. சாதி, மதம், மொழியின் பெயரால் ஆதிக்கத்தை நிலைநாட்டி ஏழைகளை ஏமாற்ற திராவிட மாடல் அரசு அனுமதிக்காது. எளிய மக்களின் உரிமைகளை காக்கும் இயக்கமாக திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ‘ஒரு துளி கண்ணீர் ஏழைகளிடம் இருந்து வெளிப்பட்டாலும் அதனை துடைக்ககூடிய கைகளாக திராவிட மாடல் அரசின் கைகள் இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். சமூக நீதியை பேணி, மனித நேயத்தை வளர்ப்பதே திராவிடத்தின் கொள்கை எனவும் கூறினார். …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்