ஏலச்சீட்டு நடத்தி ₹34.26 லட்சம் மோசடி: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு சிறை தண்டனை

சேலம், செப். 15: சேலத்தில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட் தீர்ப்பு கூறியது. சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ்(50), இவரது மனைவி பொன்னாயா(48), மகன்கள் உமாசங்கர்.(36), மகேந்திரன்(35). இவர்கள் அனைவரும் சேர்ந்து மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். கடந்த 2012 முதல் 2014ம்ஆண்டு வரை ஏலச்சீட்டில் பணம் கட்டியவர்களுக்கு திரும்ப கொடுக்கவில்லை.

இதுகுறித்து சேலம் மத்திய குற்றப்பிரிவில் புகார் கொடுக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சேலம் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து தங்கராஜ் உள்பட 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் 30க்கும் மேற்பட்டவர்களிடம் ₹34.26 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இந்த வழக்கு சேலம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டல்பபிதா, குற்றம் சாட்டப்பட்ட தங்கராஜ், பொன்னாயா, உமாசங்கர், மகேந்திரன் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹4.3 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Related posts

சட்டசபையில் செல்வராஜ் எம்எல்ஏ கோரிக்கை

திருப்பூரில் மையப்பகுதியில் செயல்படும் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்

பல்லடம் பகுதியில் புதிய ரக சோள விதைப்பண்ணையை வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு