ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை

ஏற்காடு, அக்.5: ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். சேர்வராயன் மலையில் உள்ள ஏற்காடு மிக சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. இங்கு பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளதால், எப்போதும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். இந்நிலையில், பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை விடப்பட்டதால், சுற்றுலா பயணிகள் கூட்டம் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. இதனால், பல்வேறு குற்றச்செயல்கள் நடப்பதாக போலீசாருக்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இதையடுத்து, ஏற்காட்டில் டிஎஸ்பி தேன்மொழிவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசகி ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று ஒண்டிக்கடை, ரவுண்டானா பகுதியில் தீவிர வாகனத்தை தணிக்கையில் ஈடுபட்டனர். மேலும், சுற்றுலா தளங்களை போலீசார் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். டூவீலரில் வருவோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், காரில் செல்வோர் சீட் பெல்ட் அணிய வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

3 இடங்களில் பஸ் ஸ்டாப் அமைக்க இடம் தேர்வு