Sunday, September 29, 2024
Home » ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை: சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து 37,640 ரூபாய்க்கு விற்பனை

ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை: சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து 37,640 ரூபாய்க்கு விற்பனை

by kannappan

சென்னை: சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 37,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த வாரம் குறைந்து வந்த நிலையில், இந்த வாரத்தில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கம் சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 37,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு கிராம் 45 ரூபாய் குறைந்து,  4,690 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 37,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு கிராம் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 4,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.  இந்நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 37,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு கிராம் ஆபரண தங்கம் 5 ரூபாய் உயர்ந்து 4,705  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே வெள்ளி விலை அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் 10 பைசா அதிகரித்து, ரூ.61.80 ஆகவும், கிலோவுக்கு ரூ.1,100 அதிகரித்து ரூ.61,800 ஆகவும் விற்கப்படுகிறது….

You may also like

Leave a Comment

17 − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi