ஏரி மதகு சீரமைப்பு தண்டராம்பட்டு அருகே

தண்டராம்பட்டு, ஜூன் 25: தண்டராம்பட்டு அருகே ஏரி மதகு சீரமைக்கப்பட்டது. தண்டராம்பட்டு அடுத்த வாணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட குங்கிலிநத்தம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி பொதுப்பணித்துறை மூலம் மீன் வளர்ப்பதற்காக ஏலம் விடப்பட்டது. ஏரி மதகு அடிப்பகுதியில் உடைத்து தண்ணீர் வீணாக வெளியே சென்று கொண்டிருப்பதாக தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் விரிவான செய்தி வெளியானது. இதன் எரொலியாக நேற்று தென்முடியனுர் ஊராட்சியில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வரத்து கால்வாய் பராமரிப்பு உதவியாளர்கள் ஏரியிலிருந்து மதகு வழியாக வெளியேற்றப்படும் தண்ணீரை மணல் மூட்டை கொண்டு அடுக்கி சரி செய்தனர். இதனால், மதகு பகுதியில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்