ஏடிசி பகுதியில் நிழற்குடை வசதி இல்லாததால் கிராமப்புற பயணிகள் அவதி

 

ஊட்டி, ஜூலை 12: ஊட்டியில் ஏடிசி பகுதியில் கிராமப்புறங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தும் பகுதிகளில் போதிய நிழற்குடை வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். ஊட்டியில் இருந்து கிராமப்புறங்களுக்கு ஏடிசி பகுதியில் இருந்து பஸ்கள் செல்கின்றன. இப்பகுதியில் இருந்து எல்லநள்ளி, எப்பநாடு, தேனாடுகம்பபை, அணிக்கொரை உட்பட 25க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அரசு மற்றும் மினி பஸ்கள் செல்கின்றன. இங்கு பஸ் ஸ்டேண்ட் வசதி இல்லாத நிலையில், அனைத்து கிராமங்களுக்கு செல்லும் பஸ்களும் இங்குள்ள சாலையோரங்களில் நிறுத்தப்படுகின்றன.

பயணிகள் அங்குள்ள சிறிய நிழற்குடைகளில் காத்திருக்க வேண்டியுள்ளது. இங்கு அதிகளவில் பயணிகள் நிற்க முடிவதில்லை.  பெரும்பாலான பஸ்கள் மற்றும் மினி பஸ்களும் நிழற்குடை அருகே நிறுத்தப்படுவதில்லை. இதனால், பொதுமக்கள் சாலையோரத்தில் பஸ்களுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. தற்போது அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, ஊட்டி நகராட்சி நிர்வாகம் ஏடிசி பகுதியில் கிராமப்புறங்களுக்கு செல்லும் பயணிகள் நலன் கருதி நிழற்குடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Related posts

சமயபுரம் டோல்கேட்டில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செங்கோட்டை அருகே கார்-மினிலாரி மோதல் திருச்சியை சேர்ந்த இருவர் பரிதாப பலி

பலப்படுத்தும் பணி தீவிரம் தொட்டியம் அருகே மரத்திலிருந்து குதித்த சிறுவன் உயிரிழப்பு