ஏடிஎம் வாகனம், காரில் ஆவணமின்றி எடுத்து சென்ற 1.3 கோடி அதிரடி பறிமுதல்

ஆலந்தூர்: ஆலந்தூர் பறக்கும்படை தாசில்தார் ராஜேஸ், ஆதம்பாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஏடிஎம்களுக்கு பணம் நிரப்ப வந்த 2 வாகனங்களை நிறுத்தி விசாரித்தனர். அப்போது, அவர்களிடம் அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. ஒரு வாகனத்தில் 85 லட்சமும், மற்றொரு வாகனத்தில் 13.94 லட்சம் என மொத்தம் 98.94 லட்சம் இருந்தது. அதை கைப்பற்றினர். வாகனத்தையும் பறிமுதல் செய்து ஆலந்தூர் மண்டல தேர்தல் அலுவலகத்திற்கு கொண்டுவந்து தேர்தல் அதிகாரியிடம் பணத்தை ஒப்படைத்தனர். அரசியல் கட்சியினர் இந்த பணத்தை ஏடிஎம் வாகனத்தில் கடத்த முயன்றனரா என போலீசார் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் உள்ள அகரம்தென் பிரதான சாலையில், தனியார் பல்கலைக்கழகம் அருகே தேர்தல் நிலையான சோதனைக் குழுவின் சார்பில், காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக மேடவாக்கம் நோக்கி சென்ற காரை மடக்கி சோதனை மேற்கொண்டனர். அதில், 3 லட்சம் இருந்தது.இதனையடுத்து, காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த வினோத் (30) மற்றும் வானகரம் பகுதியை சேர்ந்த ராமு (40) என்பதும், அவர்கள் கொண்டு சென்ற பணத்துக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் முன்னிலையில், தாம்பரம் தாசில்தார் சரவணனிடம் ஒப்படைத்தனர்.திருவொற்றியூர்: எண்ணூர் அன்னை சிவகாமி  நகர் சந்திப்பு அருகே, தேர்தல் பறக்கும் படை அதிகாரி குமார் தலைமையிலான  குழுவினர், நேற்று முன்தினம் இரவு, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருவொற்றியூரில் இருந்து எண்ணூர் நோக்கி சென்ற காரை மடக்கி சோதனை செய்தபோது,  அதில் 1.18 லட்சம் இருந்தது தெரியவந்தது. உரிய ஆவணம்  இல்லாததால் அதை பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்….

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு