ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த பெண்ணின் கவனத்தை திசை திருப்பி ரூ.50 ஆயிரம் அபேஸ்: வாலிபர் கைது

பெரம்பூர்: ஓட்டேரியில் ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த பெண்ணின் கவனத்தை திசை திருப்பி ரூ.50 ஆயிரம் ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை புளியந்தோப்பு விஓசி நகர் 5வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (52). இவர், மேற்படி விலாசத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் 26ம்தேதி மதியம் ஓட்டேரி ஸ்டாரான்ஸ் ரோடு இந்தியன் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்துள்ளார். அப்போது, பணம் வராததால் தனக்கு பின்னால் நின்றிருந்த நபரிடம் ரூ.10 ஆயிரம் எடுத்துக் கொடுக்கும் படி கேட்டுள்ளார்.அந்த நபர் ஏடிஎம் கார்டை செலுத்தி பணம் எடுப்பது போன்று நடித்து அக்கவுண்டில் பணம் இல்லை என்று கூறி அவரிடம் அவரது கார்டை கொடுப்பது போன்று வேறு ஒரு டம்மி கார்டை கொடுத்துவிட்டு வெளியே சென்று விட்டார். பின்னர், சிறிது நேரம் கழித்து லட்சுமியின் செல்போன் எண்ணிற்கு 5 முறை தலா ரூ.10 ஆயிரம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அதன்பிறகு, லஷ்மி மற்றவர்கள் உதவியுடன் ஏடிஎம் கார்டை பிளாக் செய்து விட்டு, இதுகுறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்த புளியந்தோப்பு உதவி கமிஷனர் அழகேசனின், தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார். விசாரணையில், செங்குன்றம் பாலாவாயில் சாதிக் பாஷா தெரு பகுதியை சேர்ந்த கார்த்திக் (37) என்ற நபரை கைது செய்தனர். இவர், மீது ஏற்கனவே திருட்டு வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. மேலும், இவரிடமிருந்து 12 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கைது செய்யப்பட்ட கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

Related posts

தக்கலையில் காருக்கு வழிவிடாததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் கோழிப்பண்ணை உரிமையாளர் வீட்டை சூறையாடிய கும்பல்

தமிழகம் முழுவதும் 53 பேரை ஏமாற்றி திருமணம் `சத்யாவை நம்பி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தேன்’

கும்பகோணத்தில் பயங்கரம் மனைவி கழுத்தை நெரித்து கொன்ற கொடூர கணவர்