ஏஜெண்ட் கண்ணாயிரம் சந்தானம் படம் இல்லை: சொல்கிறார் இயக்குனர்

சென்னை: சந்தானம், ரியா சுமன், முனீஸ்காந்த், புகழ், குருசோமசுந்தரம் நடித்துள்ள படம், ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ‘வஞ்சகர் உலகம்’ படத்தை இயக்கி இருந்த மனோஜ் பீதா இப்படத்தை எழுதி இயக்கி உள்ளார். இப்படம் குறித்து அவர் கூறியதாவது:தெலுங்கில் வெளியான ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமை என்னிடம் இருந்தது. அதை கேள்விப் பட்ட சந்தானம் என்னை அணுகினார். தெலுங்கில் இருப்பது போல் தமிழில் இக்கதையை உருவாக்க விரும்பவில்லை. காமெடி, பன்ச் ஆகியவற்றைத்தான் உங்கள் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அதைவிட்டு விட்டு வேறொரு பரிமாணத்தில் உங்களை காண் பதற்கு விரும்புகிறேன்  என்றேன். இதற்கு அவர் ஒப்புக்கொண்டு நடித்தார். இதில் வழக்கமான சந்தானத்தைப் பார்க்க முடியாது. அதிகமாகப் பேசாமல், அதிகமான எமோஷன்களை வெளிப்படுத்தி நடித்துள்ளார். ஒரு தாய்க்கும், மகனுக்குமான பாசப்  போராட்டம்தான் கதை. மகன் டிடெக்டிவ் ஏஜெண்ட். இது சந்தானம் படம் அல்ல. கதைக்குள் சந்தானம் நடித்திருக்கும் படம். அவரும் தன்னை வேறு ஜானரில் நிரூபிக்க இப்படத்தில் அதிக ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். …

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு