எஸ்.பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 32 மனுக்கள் வந்தன

திருவாரூர், ஆக. 1: திருவாரூர் எஸ்.பி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில் 32 மனுக்கள் பெறப்பட்டன. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அதற்கு உரிய தீர்வு காண வேண்டுமென அரசு சார்பில் மாவட்ட எஸ்பிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி கடந்த ஓராண்டிற்கும் மேலாக மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட எஸ்பி அலுவலகத்திலும் மனுதாரர்கள் நேரில் அழைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.

இதனையொட்டி திருவாரூர் எஸ்.பி அலுவலகத்திலும் மனுதாரர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்பட்டு வரும் நிலையில் நேற்று இந்த சிறப்பு குறைதீர் கூட்டம் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பொது மக்களிடமிருந்து 32 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், மனுக்கள் மீதான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு போலீசாருக்கு எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவிட்டார். இதில் கூடுதல் எஸ்.பி ஈஸ்வரன் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி