எஸ்பி அலுவலகம் முற்றுகை

 

சிவகங்கை, பிப்.6: சிவகங்கை அருகே இளைஞர் இறப்பிற்கு காரணமானவரை கைது செய்ய கோரி உறவினர்கள் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கீழப்பூங்குடி கிராமத்தை சேர்ந்த அழகர் மகன் அருண்ராஜ்(34). ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கில் தொங்கியபடி மர்மமான முறையில் இறந்துள்ளார். இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கோயிலில் வழிபாடு செய்வது தொடர்பாக ஏற்கனவே பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. இதில் போலீசார் அருண்ராஜை கைது செய்தனர். ஜாமீனில் வெளியே வந்த இவர் நேற்று முன்தினம் இறந்துள்ளார்.

அருண்ராஜ் உடலை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அருண்ராஜ் இறப்பிற்கு காரணமான நபரை கைது செய்யக் கோரி சிவகங்கை எஸ்பி அலுவலகத்தை இவரது உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். வாயிலை மறித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களிடம் ஏடிஎஸ்பி காட்வின் ஜெகதீஸ்குமார் பேசியதையடுத்து கலைந்து சென்றனர். பின்னர் மீண்டும் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து அவர்களை தடுத்த போலீசார் அனைவரையும் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்