எஸ்டிபிஐ கட்சியினர் மறியல்: 18 பேர் கைது

புதுக்கோட்டை, டிச.18: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் மதுக்கடையை அகற்றக் கோரி எஸ்டிபிஐ கட்சியினர் தலைமையில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் திரையரங்கம் அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் இரு டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்தக் கடைகளை அகற்றி நகருக்கு வெளியே அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில், எஸ்டிபிஐ கட்சியின் கீரனூர் நகரத் தவைவர் தீன்பாட்சா தலைமையில் இஸ்லாமிய அமைப்பினர் மற்றும் காந்திநகர் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கீரனூர் நகரச் செயலர் சந்தனகுமார் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்