எஸ்ஐ குடும்பத்திற்கு ₹3.75 லட்சம் நிதிஉதவி

தர்மபுரி, ஜன.8: தர்மபுரி ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி இறந்த எஸ்ஐ குடும்பத்திற்கு ₹3.75 லட்சம் நிதி உதவியை மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் நேற்று அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார்.தர்மபுரி ஆயுதப்படை பிரிவில் எஸ்ஐயாக தங்கராஜ் பணியாற்றி வந்தார். அவர் கடந்த மாதம் 17ம்தேதி திடீரென உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவருடன் 1994ம் ஆண்டு பணியில் சேர்ந்த போலீஸ் நண்பர்கள் சார்பாக, உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று எஸ்பி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், இறந்த எஸ்ஐயின் மனைவி கவிபிரியாவிடம், ₹3.75 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், இறந்த தங்கராஜின் மகன் அஜய் மற்றும் எஸ்ஐயுடன் பணிபுரிந்த எஸ்எஸ்ஐக்கள் கண்ணன், காவேரி, சலீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு