எவரெஸ்ட் சிகரம் ஏறும் விருதுநகர் தொகுதி பெண்: முத்தமிழ்ச் செல்விக்கு விருதுநகர் எம்பி பாராட்டு

விருதுநகர், ஏப். 12: விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஜோகில்பட்டியை சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வி, எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு தகுதி பெற்ற முதல் தமிழ்பெண் என்ற பெருமையை 33 வயதில் பெற்றுள்ளதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். விருதுநகர் மாவட்டத்திற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளது. எந்த சாதனையின் உச்சத்தையும், நாம் எவரெஸ்ட் சிகரத்தோடுதான் ஒப்பிடுகிறோம். சிறுவயது முதல் மலை ஏறுவதில் ஆர்வம் கொண்டு அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் உச்சியை அடைய வேண்டுமென்பது தங்களது கனவாக இருந்துள்ளது.

மார்ச்.8 மகளிர் தினத்தில் பெரும்புதூர் அருகே 155 உயர மலை உச்சியில் இருந்து கண்களை கட்டிக்கொண்டு 58 வினாடிகளில் இறங்கி சாதனை படைத்துள்ளீர்கள். காஷ்மீர் லடாக் பகுதியில் உள்ள 5,500 அடி உயர பனிமலை உச்சியையும் அடைந்து சாதித்துள்ளீர்கள். அதையடுத்து எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கான தகுதியை பெற்றிருக்கும் தங்களை வாழ்த்துகிறேன்.
தமிழ்நாடு அரசு ரூ.10 லட்சம் வழங்கியிருப்பதை பாராட்டுகிறேன். ஏசியன் டிரெக்கிங் நிறுவனத்தின் 37 பேர் கொண்ட குழுவினருடன் எவரெஸ்ட் சிகரம் ஏறும் பயணத்தை தொடங்கியுள்ள முத்தமிழ்ச்செல்வியின் விடா முயற்சிக்கு உறுதுணையாக உள்ள அனைவருக்கும் பாராட்டுகள் என தெரிவித்துள்ளார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை