எல்.எம்.எஸ் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

தென்தாமரைகுளம், செப்.24: தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ் மேல்நிலை பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் கால்வின் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப், தலைமை ஆசிரியை பிரீத்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு 36 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி முன்னாள் தாளாளர் அருள்ஞான பெல், சபை பரிபாலன குழு உறுப்பினர் பெனி ஜோசப், சபைக்குழு உறுப்பினர் அருள், தென்தாமரைக்குளம் பேரூராட்சி துணைத் தலைவர் மல்லிகா,கவுன்சிலர்கள் எட்வின் ராஜ், பூவியூர் காமராஜ், ஆல்வின் மற்றும் திமுக நிர்வாகி தாமரை பிரதாப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

வார்டு குழு அலுவலக அறிவிப்பு பலகையில் மாநகர சாலையோர வியாபாரிகள் பட்டியல்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி: லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர்கள் கலெக்டரிடம் மனு

மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்