எல்லையில் பாக். துப்பாக்கிசூடு

ஜம்மு: சர்வதேச எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரில் ஜம்மு மாவட்டம் அர்னியாவில் சர்வதேச எல்லைப்பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாதுகாப்பு படை வீரர்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்குதலில் இந்திய வீரர்கள் யாரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் எல்லையில் புதுப்பிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டன. எனினும் அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றது. …

Related posts

மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு

மும்பையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து