எல்லையில் ஊடுருவ காத்திருக்கும் தீவிரவாதிகள்

ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகளில் சுமார் 60 முதல் 80 தீவிரவாதிகள் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவுடன் இந்தியா எல்லைக்குள் ஊடுருவ காத்திருப்பதாக ராணுவ உயர் அதிகாரிகள் தகவல் தெரிவி்ததுள்ளனர். அவர்கள் கூறுகையில், ‘‘பதுங்கி உள்ள தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் போரில் பங்கேற்று திரும்பிய பாகிஸ்தான் கூலிப்படையினர். கடந்த ஆண்டு பிப்ரவரியில் இருந்து போர்நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டு வருவதை பயன்படுத்தி, சுமார் 8,000 டன் தளவாடப் பொருட்களுடன் எல்லையில் தனது நிலைகளை பாகிஸ்தான் வலுப்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் வான் பாதுகாப்பு அமைப்பு, பீரங்கி, 60 கனரக துப்பாக்கிகளையும் கொண்டு சென்றுள்ளனர். அனைத்து வகையான சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் ஊடுருவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு எல்லையில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’’ என்றனர்….

Related posts

மேகாலயாவில் வௌ்ளம் 10 பேர் பலி

மணிப்பூரில் கலவரத்தின்போது காவல்நிலையத்தில் இருந்து திருடப்பட்ட 80% ஆயுதங்கள் மீட்பு

உத்தரகாண்ட் மலையில் சிக்கி தவித்த 2 வெளிநாட்டு வீராங்கனைகள் மீட்பு