எல்லாபுரம் ஒன்றிய ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தை சுற்றி மழைநீர் சாலை; வடிக்கால் கால்வாய் அமைத்து தர கோரிக்கை

பெரியபாளையம்: மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மழைநீர் குளமாக காட்சியளிக்கிறது. இங்கு சாலை மற்றும் வடிக்கால் அமைத்து தர வேண்டும் என நோயாளிகள் மற்றும் அவர்களைப் பார்க்க வரும்  உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த மருத்துவமனைக்கு குமரப்பேட்டை, வடமதுரை, பெரியபாளையம், தண்டலம், ஆத்துப்பாக்கம், கிளாம்பாக்கம், கன்னிகை பேர் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.   நாள்தோறும் சுமார் 500க்கும் மேற்பட்ட பல்வேறு நோயாளிகள் சிகிச்சை பெற இந்த மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.   இந்த மருத்துவமனை வளாகத்தில் பிரசவ அறை, அறுவ சிகிச்சை அறை உள்ளிட்டவை அடங்கி உள்ளன, பல நூறு கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் இந்த மருத்துவமனைவளாக உட்புறம்  சாலை வசதி இல்லாததால் நேற்று பெய்த  சிரிய மழைக்கு மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் அவையை பயன்படுத்த ்நோயாளிகள் கடும் சிரமத்திற்குகாளாகின்றனர். மருத்துவமனைக்கு சாலை மற்றும் வடிக்கால் கால்வாய் அமைத்து தர வேண்டுமென பலமுறை சம்பந்தப்பட்ட மாவட்ட சட்டமன்ற உறுப்பினரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகள் மற்றும் அவர்களைப் பார்க்க வரும்  உறவினர்கள் கூறுகையில்,  இந்த மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெரியபாளையம் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு, சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் செவிலியர்கள் தகுந்த பதில் கூறுவதில்லை. அனைத்து வசதிகள் உள்ள இந்த மருத்துவமனைக்கு, சாலை வசதி இல்லாத காரணத்தினால் மழைக்காலங்களில் மழை பெய்தால் மழைநீர் செல்ல வழி இல்லாத காரணத்தினால் வளாகத்தில் தேங்கி நிற்கிறது. தற்போது அடிக்கடி பெய்து வரும் மழையால் மருத்துவமனை குளம் போல் காட்சியளிக்கிறது. மழைநீரும் ஆங்காங்கே  நிற்பதால் சேரும் சகதியாக மாறி நடந்து செல்ல முடியாத அளவிற்கு மிகவும் கடினமாக உள்ளது. மேலும், மழை நீர் அங்காங்கே தேங்கி இருப்பதால், கொசுகள் உற்பத்தியாகும் அச்சமும் நிலவி வருகிறது. எனவே, மழை நீர் செல்ல வடிகால் கால்வாயும், சாலை வசதியை ஏற்படுத்தி  தர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்….

Related posts

அரசியல் ஆதாயத்துக்காக கொலை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை: கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் பேட்டி

சைக்கிளில் சென்று மக்களிடம் குறைகளை கேட்ட திமுக எம்பி

அரசு மரியாதை வழங்கக் கோரிய விண்ணப்பம் மீது அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம்: நீதிபதி!