எல்லாபுரம் ஒன்றியத்தில் ரூ. 1.19 கோடியில் வளர்ச்சி பணிகள்: கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம்

ஊத்துக்கோட்டை:  எல்லாபுரம் ஒன்றியத்தில்  வளர்ச்சி பணிகளுக்கு  ரூ. 1.19 கோடி ஒதுக்கீடு செய்ய கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எல்லாபுரம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.  இதில் ஒன்றிய குழு தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுரேஷ்  , வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  நடராஜ் , ஸ்டாலின்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன ,தாராட்சி கிராமத்தில் கைபம்பு அமைப்பது,  தார்ச்சாலை அமைப்பது,  பேரண்டூர் தார்சாலை,  தண்டலம் , பாலவாக்கம்,  தும்பாக்கம், கல்பட்டு  சிமெண்ட் சாலை   அமைப்பது எனவும்,  கன்னிகைப்பேர், வடமதுரை  தார்சாலை,  கன்னிகாபுரம் பைப் லைன் அமைப்பது,  கோடுவெளி கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைப்பது, பெரியபாளையம் வஉசி நகர் சிமென்ட் சாலை அமைக்க ரூ. 1 கோடியே 17 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது. தாமரைப்பாக்கம் கிராமத்தில்  ரூ. 2 லட்சத்தில் மழைநீர் வடி கால்வாய் அமைப்பது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள்  குணசேகரன், ஜமுனா , தனலட்சுமி , கல்பனா,  காங்கிரஸ் திருமலை சிவசங்கர்,   அதிமுக கவுன்சிலர்கள் குழந்தைவேல்,  வித்யாலட்சுமி  வேதகிரி  , தட்சிணா மூர்த்தி , ஜெயலட்சுமி குமார்,  சியாமளா , விவேகானந்தன்  உட்பட பலர் கலந்து கொண்டனர்….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு