எல்லாபுரம் ஒன்றியத்தில் பாழடைந்த வட்டார வளர்ச்சி அலுவலக கட்டிடத்தை அகற்ற வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை

பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்டம்  எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையத்தில் பழைய பழுதடைந்து வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது.  இது சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்த  அலுவலகம் தற்போது மூடப்பட்டு சிதலமடைந்த  நிலையில் உள்ளது. எனவே,  இந்த கட்டிடம் எந்த நேரத்திலும் சரிந்து விழும் நிலையில் இருக்கிறது. இந்நிலையில், இதற்கு மாறாக அருகாமையிலேயே 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு தற்போது வட்டார வளர்ச்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு  நாள்தோறும் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 53 ஊராட்சிகள் சேர்ந்த மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பணி நிமித்தம் வந்து செல்கின்றனர்.  இதனை அடுத்துதான்  இந்த கட்டிடத்திற்கு பின்புறம் உள்ள பாழடைந்த வட்டார வளர்ச்சி அலுவலகமானது மூடப்பட்டு உள்ளது. அதில் அடர்ந்த செடி, கொடிகள்  முட்புதர்கள் உள்ள காரணத்தினால் அதில் விஷம் நிறைந்த பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.  சமீபத்தில்  இந்த பழுதடைந்த கட்டிடத்திற்கு அருகாமையில் உள்ள சமுதாய கட்டிடம் சுத்தம் செய்தபோது, பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இந்த பணியில் ஈடுபடும் நாங்களும் அச்சம்படுகின்றோம் என கூறியுள்ளனர். எனவே,  இந்த பாழடைந்த பழைய வட்டார வளர்ச்சி அலுவலக கட்டிதத்தை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.  …

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்