எல்லாபுரம் ஒன்றியத்தில் ரூ.1.5 கோடி நிதியில் வளர்ச்சி பணிகள்: கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம்

ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியத்தில் ₹1 கோடியே 5 லட்சம் நிதியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எல்லாபுரம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஒன்றிய குழு தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரி, ஸ்டாலின், மண்டல துணை வட்டாட்சியர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திருக்கண்டலம் ஊராட்சியில் அண்ணாநகர் பகுதியில் சிமென்ட் கால்வாய், வெங்கல் ஊராட்சியில் சிமென்ட் கால்வாய், சேத்துப்பாக்கம், கல்பட்டு, பாலவாக்கம், குமரபேட்டை, கிளாம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் கால்வாய் அமைக்கும் பணி செய்ய ₹37 லட்சத்து 57 ஆயிரத்து 314 நிதி ஒதுக்கப்பட்டது. மேலும், தும்பாக்கம், தொளவேடு, கன்னிகாபுரம், தாமரைப்பாக்கம், கோடுவெளி, தாராட்சி, கன்னிகைப்பேர், பெரியபாளையம் போன்ற பகுதிகளில் பைப்லைன் அமைக்க ₹37 லட்சத்து 51 ஆயிரத்து 314 நிதி ஒதுக்கப்பட்டது. இதேபோல் தண்டலம், செங்கரை, சென்னங்காரணி,  பெரியபாளையம், வடமதுரை, பாகல்மேடு, நெய்வேலி, தாராட்சி ஆகிய பகுதிகளில் பேவர் பிளாக் சாலை, மதில் சுவர் அமைத்தல் போன்ற பணிகளுக்காக ₹50 லட்சத்து 1,752 நிதி ஒதுக்கப்பட்டது. ஆக மொத்தம் ₹1 கோடியே 5 லட்சத்து 10 ஆயித்து 380 மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் செய்வது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில், திமுக கவுன்சிலர்கள் கோகிலா குணசேகரன், சுரேஷ், ஜமுனா, தனலட்சுமி, கம்யூ. ரவி, காங்கிரஸ் திருமலை சிவசங்கர்,  அதிமுக கவுன்சிலர்கள் குழந்தைவேல், சரவணன், லதா அசோக், சியாமளா தர் உட்பட பலர் கலந்துகொண்டனர்….

Related posts

அரசு மரியாதை வழங்கக் கோரிய விண்ணப்பம் மீது அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம்: நீதிபதி!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி!

பெரம்பூர் கட்சி அலுவலகத்தில் நினைவிடம் அமைத்துக் கொள்ளலாம்: நீதிபதி பவானி சுப்பராயன்!