எலி கடித்து நோயாளி பலி: மருத்துவமனை அலட்சியம்: மருத்துவர்கள் பணி நீக்கம்

தெலுங்கானா: தெலுங்கானாவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேயாளியை எலி கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார், அலட்சியமாக செயல்பட்டதால் மருத்துவமனையில் பணியாற்றிய 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தெலுங்கானா மாநிலம் அனுமங்கொண்ட மாவட்டம் பீமாரனை சேர்ந்த சீனிவாஸ் சிறுநீரகம் தொடர்பான நோய்க்காக வாரங்கல் எம்.ஜி.ம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தீவிர சிகிக்சை பிரிவில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சீனிவாஸ் கால் மற்றும் கை விரல்களை எலி கடித்து இருப்பதை பார்த்த உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்து வாக்குவாதம் செய்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரசனையில் மருத்துவமனை அலட்சியமே காரணம் என தெரியவந்தது. இதை அடுத்து மருத்துவமனை கண்காணிப்பாளர் சீனிவாசராவ்-ஐ இடமாற்றம் செய்தது தெலுங்கானா சுகாதாரதுறை.பணியில் இருந்த மருத்துவர்கள் இருவரை பணிநீக்கமும் செய்து உத்தரவிட்டது.மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் ஸ்ரீ எர்ரபில்லி தயாகர் ராவ். சீனிவாசை ஐதராபாத் அரசு நிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றி சிகிக்சை அளிக்க உத்தரவிட்டார் அங்கு சிகிச்சை பெற்று வந்த சீனிவாஸ் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எலி கடித்ததால் சினிவாஸ் உயிர் இழந்து விட்டதாக உறவினர்கள் புகார் கூறி வருகிறார்கள். இது தொடர்பான விரிவான விசாரணை நடத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி எலி கடித்த நிலையில் உயிரிழந்த சம்பவம் தெலுங்கனாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

Related posts

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு தொடர்பான நிலை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிபிஐ

பாலியல் புகாரை விசாரிக்க நடிகை ரோகிணி தலைமையில் குழு பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக ஊடகங்களில் கருத்து தெரிவிக்க வேண்டாம்

மாஜி துணை பிரதமர் தேவிலால் பேரன் பாஜவில் இருந்து விலகல்