எருமாடு பகுதியில் வாழை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

 

பந்தலூர், ஜூலை 18: நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் கூடலூர், கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகப்படியாக நேந்திரம் வாழை பயிரிடுவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். நேந்திரம் வாழை பழம் மற்றும் காய் சிப்ஸ் செய்வதற்கும் அன்றாட உணவுகளில் நேந்திரம் வாழை பழம் முக்கியமானதாக உள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகையின் போது மக்கள் அதிகளவில் நேந்திரம் வாழை பழம் பல்வேறு விதமான இனிப்பு, காரம் பலகாரங்கள் செய்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

சிறு குழந்தைகளின் அன்றாட உணவுகளில் நேந்திரம் வாழை பழம் மிகவும் முக்கியமாகவும் இருந்து வருகிறது. வணிக நோக்கில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் நேந்திரம் வாழை பயிரிட்டு வருகின்றனர். தற்போது, கடைகளில் ஒரு கிலோ நேந்திரம் வாழை பழத்தின் விலை ரூ.50 வரை விற்கப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ நேந்திரம் வாழையை வியாபாரிகள் ரூ.35 வரை கொள்முதல் செய்து வருகின்றனர் நேந்திரம் வாழை ஒரு தார் சுமார் 20 கிலோ வரை இருப்பதாகவும், தாரின் விலை ரூ.700 வரை விற்பனை ஆவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பந்தலூர் சுற்று வட்டார பகுதியான எருமாடு, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் நேந்திரம் வாழையை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்