எரியாத மின்விளக்குகளால் விபத்து அபாயம் விரைவில் சீரமைக்க வலியுறுத்தல்

வேலாயுதம்பாளையம்:தவிட்டுபாளையம் உயர்மட்ட பாலத்தில் எரியாத மின்விளக்குகளால் விபத்து அபாயம் உள்ளது. எனவே விரைவில் மின்விளக்குகளை சீர் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வேலாயுதம்பாளையம் தவுட்டுபாளையம் பகுதியானது கரூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் அதிக அளவு விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் உள்ள பகுதியாகும். மேலும் இந்த வழியாக நாமக்கல், சேலம், தருமபுரி ஆகிய பகுதியிலிருந்து தமிழ்நாடு காகித ஆலைக்கு கொண்டு வர வேண்டிய மூலப் பொருட்கள் இந்த வழியாகத்தான் கனரக வாகனங்களில் கொண்டு வரப்படுகிறது. இப்பகுதியில் நீண்ட நாளுக்காக உயர்மட்ட பாலம் இல்லாமல் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இப்பகுதி மக்களின் நீண்ட நாட்களாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கரூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான செந்தில்பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ ஆகியோர் நேரடியாக கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவு பெற்று தற்போது பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை