எரிபொருள் நிரப்பும் காரை மின்சார காராக மாற்றும் தொழில்நுட்பத்தை சென்னையை சேர்ந்த இளைஞர் கண்டுபிடிப்பு!!

சென்னை : வீட்டில் இருக்கும் எரிபொருள் நிரப்பும் காரை மின்சார காராக மாற்றும் தொழில்நுட்பத்தை சென்னையை சேர்ந்த ஒருவர் கண்டுபிடித்துள்ளார். அவரது கண்டுபிடிப்பிற்கு ஒன்றிய அரசும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை நினைக்கும் போது, எலெக்ட்ரிக் வாகனம் வாங்கி இருக்கலாமே என்ற எண்ணம் வகை ஓட்டிகளுக்கு வரலாம்.ஆனால் கையில் இருக்கும் எரிபொருள் வாகனத்தை என்ன செய்வது என்ற கேள்வியும் புதிதாக எலெக்ட்ரிக் வாகனம் வாங்க பணத்திற்கு என்ன செய்வது என்ற எண்ணமும் கூடவே வரும். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக வீட்டில் இருக்கும் எரிபொருள் நிரப்பும் காரை எலெக்ட்ரிக் காராக மாற்றினால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல கையில் காசு இருக்கும் போது , பெட்ரோலைப் போட்டு காரை பயன்படுத்தலாம். பெட்ரோல் வாங்க போதிய பணம் இல்லையென்றால் அதே காரை எலெக்ட்ரிக் காராகவும் பயன்படுத்தலாம். இந்த புதுமைப் படைப்பை சாத்தியமாக்கி உள்ளார் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தனசேகரன். இரண்டு விதமான எரிபொருளிலும் இயங்குவதால், இந்த வகைக் கார் ஹைபிரிட் கார் என அழைக்கப்படுகிறது. எரிபொருள் நிரப்பும் பழைய காரிலேயே பேட்டரி பொருத்தி அதனை எலெக்ட்ரிக் காராக பயன்படுத்தலாம். இதற்காக தனசேகர் உருவாக்கியுள்ள பிரத்யேக கார் பேட்டரிக்கு கடந்த மாதம் ஒன்றிய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத இந்த வகை காருக்கான மோட்டாரை தயாரிக்க நீதி ப்ராயீஷீன் என்ற திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு நிதி வழங்கியுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 80 கிமீ வரை செல்லும் திறன் உடைய இந்த எலெக்ட்ரிக் காருக்கு எரிபொருள் நிரப்பும் காரைவிட மிக குறைவான செலவே ஆகும் என்கிறார் தனசேகரன்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை