எரணம்பட்டியில் தடுப்புச்சுவர் இல்லாத கிணறு

சின்னமனூர் : சின்னமனூர் அருகே சங்கராபுரத்திலிருந்து கோணம்பட்டி வழியாக எரணம்பட்டி கிராம ஊராட்சி உள்ளது. இங்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கோணாம்பட்டியிலிருந்து எரணம்பட்டி சாலையின் இருபுறங்களிலும் விவசாயம் ெதாடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சாலையில் ஒரு தோட்டத்தில் உள்ள கிணறு சாலையோத்தில் தடுப்புச்சுவர் இல்லாமல் உள்ளது. இதனால் இவ்வழியே சாலையை கடக்கும் வாகனங்கள் கிணற்றுக்குள் கவிழ்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அதிவேகமாக செல்லும் டூவீலர்களிடையே நாய் குறுக்கே வந்தால் அந்த வாகனம் கிணற்றுக்குள் பாயும் அபாயமும் உள்ளது.எனவே, எரணம்பட்டி கிராம ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் சாலையோரத்தில் ஆபத்தான நிலையில் உள்ள கிணறுக்கு தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என ஓட்டுநர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவை தொகை ₹94.49 கோடி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

அமாவாசை முன்னிட்டு இன்றும், நாளையும் 1,065 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட்: டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு