எய்ட்ஸ் நோய்க்கான மருந்து பற்றாக்குறை: ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: நாட்டில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஆன்டிரெட்ரோவைரல் மருந்துகள் பற்றாக்குறையை இருப்பதாக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்தியன் நெட்வொர்க் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், ‘நாட்டில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆன்டிரெட்ரோவைரல் மருந்துகளுக்கு பற்றாக்குறை உள்ளது.  தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் ஆன்டி ரெட்ரோ வைரஸ் சிகிச்சை  மையங்களில் மருந்துகள் கிடைக்காததால், எய்ட்ஸ் நோயால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏஆர்வி சிகிச்சை தடைபடுகிறது’என்று  கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஒன்றிய சுகாதார அமைச்சகம், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது….

Related posts

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்

காங்கிரசில் நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு