எம்பிபிஎஸ், பிடிஎஸ் கட்டணம் ரூ. 35 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை உயர்வு: கட்டண நிர்ணயக்குழு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இயங்கி வரும்  தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை  ரூ. 35 ஆயிரம் முதல் ரூ.  1 லட்சம் வரை கட்டண நிர்ணயக் குழு உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் தனியார் சுயநிதி கல்லூரிகளுக்கான கட்டணத்தை  முறைப்படுத்த அமைக்கப்பட்டுள்ள நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான கட்டண நிர்ணயக் குழு தற்போது புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது. அதன்படி தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில்  சேர்ந்துள்ள எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிக்கும் அனைத்து வகை மாணவ மாணவியரும் கல்விக் கட்டணமாக ரூ. 35 ஆயிரம்  முதல் ரூ. .1 லட்சம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள கட்டண நிர்ணயக் குழுவின் அறிவிப்பில், புதியதாக தொடங்கப்பட்ட இரண்டு தனியார் பல்கலைக் கழகங்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான கட்டணம் ரூ. 5.40 லட்சம் முதல் ரூ. 28.8 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையல்லாத  கல்வி நிறுவனங்கள் 65 சதவீத இடங்களை அரசுக்கும், சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் 50 சதவீத இடங்களையும் ஒப்படைக்க உள்ளன. மீதம் உள்ள 35 சதவீதம் முதல் 50 சதவீத  இடங்்களுக்கான சேர்க்கை நிர்வாக ஒதுக்கீ்ட்டில் நடக்கும். புதிய கட்டண முறையின்படி மாணவர்கள் தனியார் சுயநிதி கல்லூரியில் சேரும் போது ரூ. 4.3 லட்சம் முதல் ரூ. 4.5 லட்சம் வரை  ஒரு ஆண்டுக்கு செலுத்த வேண்டும். திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்கின்ற மாணவர்கள் அதிகபட்சமாக ஒரு ஆண்டுக்கு ரூ. 4.5 லட்சம்  செலுத்த வேண்டியுள்ளது. இது கடந்த  ஆண்டு கட்டணத்தைவிட ரூ. 55 ஆயிரம் அதிகம். குறைந்தபட்சமாக பார்த்தால், சென்னையில் உள்ள ஒரு தனியார் மரு்த்துவக் கல்லூரியில் படிக்கின்ற மாணவர்கள் ஒரு ஆண்டுக்கு ரூ. 4.3 லட்சம் செலுத்த வேண்டியுள்ளது. இது கடந்த  ஆண்டைவிட ரூ. 35ஆயிரம் குறைவு. பிற 16 கல்லூரிகளில் அரசு இடஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்கள் ரூ. 13.51 லட்சம் செலுத்த வேண்டும். என்ஆர்ஐ மாணவர்கள் ரூ. 24.5 லட்சம் செலுத்த வேண்டும். கடந்த 2021ம் ஆண்டு கட்டணத்தை ஒப்பிடும் போது மேற்கண்ட இரண்டு பிரிவு மாணவர்களுக்கும் ரூ. 1 லட்சம் உயர்ந்துள்ளது. என்ஆர்ஐ இடங்களில் காலி ஏற்பட்டாலோ, என்ஆர்ஐயினர் பொதுப்பிரிவுக்கு செல்லும்போதோ ஏற்படும் காலி இடங்களில் சேர்ந்தால்  அதற்கான ஆண்டுக்கட்டணம் ரூ. 21.50 லட்சமாக இருக்கும்.  சமயபுரம்,  செங்குன்றம், ஆகிய பகுதிகளில் இயங்கும் தனியார் மருத்துவ பல்கலைக் கழகங்களில் அரசு ஒதுக்கீ்ட்டின் கீழ் சேர்ந்துள்ள  மாணவர்கள் ரூ. 5.4 லட்சம் ஒரு ஆண்டுக்கு செலுத்த வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ளவர்கள் ரூ. 16.21  லட்சம் ஒரு ஆண்டுக்கு செலுத்த வேண்டும். என்ஆர்ஐ மாணவர்கள் ரூ. 29.4 லட்சம் செலுத்த வேண்டும். என்ஆர்ஐக்கான காலியிடங்களில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் ரூ. 25.80 லட்சம் செலுத்த வேண்டும்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்