எமரால்டு சாலையில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி மும்முரம்

ஊட்டி: ஊட்டியில் இருந்து எமரால்டு செல்லும் சாலையில் இத்தலார் பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் தடுப்பு சுவர் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் மலைப்பாங்கான பகுதிகளிலும், பள்ளத்தாக்குகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சாலைகளில் பருவமழையின்போது மண் சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்படுகின்றன. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க தற்போது மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகளில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் மற்றும் சாலை விரிவாக்க பணிகளும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது ஊட்டியில் இருந்து எமரால்டு செல்லும் சாலையில் இத்தலார் பகுதியில் சாலையோரத்தில் மண் சரிவு ஏற்படாமல் இருக்க தடுப்புச்சுவர் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் பருவமழை காலங்களில் மண் சரிவுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்