எப்பிஐ சோதனையை தொடர்ந்து அதிரடி ரியல் எஸ்டேட்டில் மோசடி டிரம்பிடம் நீதி விசாரணை: அமெரிக்காவிலும் அரசியல் விளையாட்டு

வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிடம் அட்டர்னி ஜெனரல் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபரான டெனால்ட் டிரம்ப் கடந்தாண்டு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் போது, சில முக்கிய கோப்புகளை கொண்டு சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக புளோரிடாவில் உள்ள அவருடைய வீட்டில் போலீசார் (எப்பிஐ) நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், டிரம்ப்பின் ரியல் எஸ்டேட் நிறுவன மோசடி தொடர்பான வழக்கில் அவரிடம் அட்டர்னி ஜெனரல் விசாரணை நடத்தி இருக்கிறார்.டிரம்ப் நடத்தும் ரியல் எஸ்டேட் நிறுவனம் தனது நிறுவன மதிப்பை அதிகரித்து காட்டி மோசடி செய்து, கடன் விவகாரங்களில் தில்லுமுல்லு செய்ததாக பல ஆண்டாக விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப், மகன் ஜூனியர் டிரம்ப் ஆகியோரிடம் நீதி விசாரணை நடந்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் டிரம்ப் ஆஜராகி விளக்கமளிக்க நியூயார்க் மாநில அட்டர்னி ஜெனரல் லிடிடியா ஜேம்ஸ் சம்மன் அனுப்பினார். அதன்படி, நேற்று காலை டிரம்ப் விசாரணைக்கு நேரில் ஆஜாரானார். அவரிடம் சில மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் வெளியில் வந்த டிரம்ப், விசாரணை குறித்து பேச மறுத்து விட்டார். டிரம்ப் மீது அடுத்தடுத்த வழக்குகள் பாய்வது அமெரிக்க அரசியலில் புதிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது….

Related posts

பெருவில் பூமிக்கு அடியில் 60 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு

பாகிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் வாட்டி வதைக்கும் வெயில்; இதுவரை 568 பேர் உயிரிழப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல்; டிரம்ப்புடன் விவாதம்: பைடன் திணறல்; புதிய வேட்பாளரை அறிவிக்க ஜனநாயக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி