எப்படி அழைப்பேன் உன்னை?

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்-63அரியது எது? பெரியது எது? கொடியது எது? இனியது எது? என்றெல்லாம் ஔவைப்பாட்டியிடம் மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து முருகப் பெருமான் கேள்வி கேட்டு பாடல்கள் மூலமே பதிலைப்பெற்ற சம்பவத்தை நாம் அனைவருமே அறிந்திருப்போம்.இனியது எது? என்ற கேள்விக்கு ஔவை சொன்ன பதிலில் உச்சியில் வைத்து மெச்சிய இன்பம் எது தெரியுமா?‘அறிஞர் தம்மைக் கனவிலும் நனவிலும்காண்பதுதானே’திருவள்ளுவரும் தம் திருக்குறளில் உவப்பத் தலைகூடி உள்ளப் பிரிதல்அனைத்தே புலவர் தொழில்- என்று பாடுகின்றார்.நம் நற்றமிழில் உள்ள கவிதை இன்பங்களை அனுபவித்து மகிழவும், அடுத்தவர்க்கு விரித்துரைத்து சொல்லவும் நம் வாழ்நாட்கள் போதாது. கல்விச் செல்வமும், கேள்விச் செல்வமும் பெற்ற செந்தமிழ் விற்பனர்களோடு கலந்துரையாடி பெறும் இன்பத்தைவிட சொர்க்கலோகம் என்ன சுகத்தைத் தந்துவிடப் போகிறது? என்று நீதி வெண்பாவும்.நாம் ஒருங்கே இருந்து உயர்தனிச் செம்மொழியான தமிழில் சுவை விருந்தளித்தால் தேவர்கள் இறங்க நம் மண்ணுலகிற்கு வந்து விடுவார்கள் என்று மகாகவி பாரதியாரும் பாடுகின்றார்.தவலரும் தொல்கேள்வித் தன்மை உடையார்இகல் இலர் எஃகுடை யார் தம்முள் குழி இநகலின் இனிதாயிற் காண்போம்அகல்வானத்து உம்பர் உறைவார் பதி (நீதி வெண்பா)‘தேவர் வருக’ என்று சொல்வதோ? – ஒருசெம்மைத் தமிழ் மொழியை நாட்டினால்ஆவல் அறிந்து விடுவீர் கொலோ!(பாரதியார் பாடல்கள்)‘எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும்’ என்கிறது நம்செந்தமிழ்! எண் அலங் காரத்திலேயே இறைவனின் பெருமையை எழுத்தில் வடித்துள்ள திருமந்திரத்தின் முதற் பாடல் அனைவர் நெஞ்சையும் அப்படியே கொள்ளக் கொள்கிறது.மூவாயிரம் ஆண்டுகள் தம் பூத உடலோடு இப்பூவுலகில் வாழ்ந்தவர் திருமந்திரம் அருளிச்செய்த  திருமூலர். ஆண்டுக்கு ஒரு பாடலாக  மூவாயிரம் பாடல்கள் பாடி உள்ளார்.‘மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்’ என்பார்கள். ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் பாடியதால் ஒவ்வொரு பாடலும் சிந்தனை அடர்த்தியோடும், சீரிய சொல்லழகோடும் நம் சிந்தைக்கு விருந்தளிக்கின்றன.ஒன்றவன் தானே!இரண்டவன் இன்னருள்!நின்றனன் மூன்றினுள்!நான்கு உணர்ந்தான்!ஐந்து வென்றனன்!ஆறு  விரிந்தனன் !ஏழு உம்பர்ச் சென்றனன்தான் இருந்தான் உணர்ந்து எட்டே!இப்பொருள், அப்பொருள், இவ்விடம், அவ்விடம் என்றெல்லாம் பாகுபாடு இன்றி அனைத்துயிர்க்கும் காப்பாக, பரிபூரணமாக நிறைந்துள்ள பரம்பொருள் ஒன்றே.அச்சிவபெருமானின் அருள்நிறைவே சக்திசிவசக்தி ஐக்கியமே அர்த்தநாரீசுவரர். ஒன்றில் இரண்டு.படைத்தல், காத்தல், நீக்கல் என முத்தொழிலும் சிவபெருமான் ஆற்றலே. அதீதன், உலககாரணன், உலகிற்கு உயிராக இருப்பவன், உலக வடிவாய் விளங்குபவன் என நான்காக  ஞானிகளால் அப்பெருமான் உணரப்படுகின்றார்.மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளையும் இயல்பிலேயே அமைதியுற அப்பெருமானிடம் அடங்கி உள்ளன. ஆறு ஆதாரங்களாகவும், அதற்குரிய ஆறு தேவதைகளாகவும், ஆறு அத்துவாக்களாகவும் அவன் விரிந்தவன். ஏழாவதான துவாதசாந்தப் பெருவெளியில் இலங்கு பவனும் அவனே. மண், புனல், அனல், காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா என எட்டுக்கும் ஆதாரமான அட்ட மூர்த்தியாக உள்ளவனும் அவனே!கணக்கை ‘ஒன்று இரண்டு மூன்று’ என ஏறு முகமாகக் கற்பித்து, கடவுள் பற்றிய கருத்தையும் நம் சிந்தனையில் ஏறும் முகமாக ஏற்றித் தந்துள்ள திருமூலரின் எழுத்து இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் அல்லவா!ஆண் பாதியாகவும் பெண் பாதியாகவும் ‘நீல மேனி வாலிழை பாகத்து ஒருவனாக விளங்கும் ஒப்பற்றவனைத் திருவாசகம் அற்புதச் சொற்பதங்களில் ஆராதிக்கிறது.தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்பால் வெள்ளை நீறும் பசுஞ்சார்ந்தும் பைங்கிளியும்சூலமும் தொக்கவளையும் உடைத் தொன்மைகோலமே நோக்கிக் குளிர்ந்து ஊதாய் கோத்தும்பி!ஐயன் அலங்காரம் ஒருபுறமாகவும் அம்பிகை தரித்த அணிமணிகள் மற்றோர் புறமாகவும் விளங்கும் பழந்திருமேனி அம்மையப்பனை பைந்தமிழில் படம் பிடிக்கிறது இப்பாடல்ஒரு பக்கம் தோலாடை அம்பிகைக்குத்துகில்குழை சிவனுக்கு  தோடு  தேவிக்குவிபூதி இறைவனுக்கு சாந்துப் பொட்டு இறைவிக்குபிரான் கையில் சூலம் பிராட்டி கரங்களில் வளையல்அமிழ்தை விட அதிகம்  தித்திக்கிற தல்லவா ஆன்மிகத் தமிழ்!- குமரகுருபரர் கூறுகின்றார்.எனக்கொரு ஐயம்! அர்த்த நாரீசுவரரை எப்படி அழைப்பது? வலப்பக்கம் சிவனாகவும், இடப்பகுதி அம்பிகையாகவும் தோற்றம் அளித்தாலும் சிவசக்தி ஒருவரே! இருவர் அல்லவே! எனவே ஒருவனே! அருள்க!’ என வேண்டுதலோ ‘வருத்தியே! கருணை புரிக’ என உரைத்தலோ சரியன்று. ஒருவன் என்பது ஆண்பால். ஒருத்தி என்பது பெண்பால். ஆனால் இருவரும் இணைந்த வடிவை ‘ஒருவர்’ என்று பொதுப் பாலில் அழைப்பதற்கு தமிழ் மொழி வழி வகுக்கிறது.இச்சொல் மட்டும் செம்மொழித் தமிழில் இல்லாது போயிருந்தால் நான் அம்மையப்பனை எப்படி அழைப்பேன்?அருவருக்கும் உலக வாழ்வு அடங்க, நீத்தோர்க்குஆனந்தப் பெருவாழ்வாம் ஆடல் காட்டமரு அருக்கன், மதி, வளி, வான் யமானன், தீ, நீர்மண் எனும் எண்வகை உறுப்பின் வடிவு கொண்ட ஒருவனுக்கும் ஒருத்திக்கும் உருஒன்றால் அவ் உருவை இஃது ஒருத்தன் என்கோ ஒருத்தி என்கோ இருவருக்கும் உரித்தாக ‘ஒருவர்’ என்றோர் இயற் சொல் இலது எனின் யான் மற்று என் சொல்கேனே.பாடல்களும், பதிகங்களும், பாசுரங்களும் நமக்குத் தரும் பைந்தமிழ்ப் பக்திச் சுவையை அனுபவிக்க மீண்டும் பிறப்பை நாம் இறைவனிடம் வேண்டுவோம்.திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

Related posts

சாபங்களும் தோஷங்களும் ஏன்?

நிறம் மாறும் அதிசய லிங்கம்

கவச அத்தியாயங்கள்..!